விஸ்மா டிஎபிக்கு நன்கொடை வழங்கியவர்கள்: வந்து பட்டியலைப் பாருங்கள்

 

Fundingfor wismadapபினாங்கு, ஜாலான் ரங்கூனில் அமைந்திருக்கும் விஸ்மா டிஎபி கட்டுவதற்கு அளிக்கப்பட்ட நன்கொடை அக்கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக்கணக்குகளில் போடப்படவில்லை என்று பினாங்கு டிஎபி அறிவித்தது.

பல்வேறு நிதி திரட்டல் நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் கட்சியின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது என்று மாநில டிஎபி சோசலிச இளைஞர் பிரிவின் தலைவர் ங் வே அய்க் கூறினார்.

“நாங்கள் இப்போது கேட்பது ஏன் ரிம2.6பில்லியன் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு சென்றது.

“டிஎபி அதன் கட்டட நிதி விபரங்களை வெளியிட வேண்டும் என்று பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவு டிஎபிக்கு விடுத்திருந்த சவால் முற்றிலும் சம்பந்தமில்லாதது”, என்று தொடர்பு கொண்டபோது ங் மலேசியாகினியிடம் கூறினார்.

இப்போது கடுமையாக விவாதிக்கப்படும் விவகாரம் அரசியல் நிதி பற்றியதல்ல; ஏன் பில்லியன் கணக்கான நிதி நஜிப்பின் தனிப்பட்ட கணக்கில் வைக்கப்பட்டது என்பதாகும் என்ரு தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான ங் மேலும் கூறினார்.

அப்பணம் ஓர் அனாமதேய நன்கொடையாளர் அளித்தது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்திருந்தாலும், அது ஓர் “இலஞ்சம்” என்று அவர் தெரிவித்தார்.

அவ்வாறான நன்கொடைகள் எம்எசிசி சட்டத்தின் கீழ் ஒரு வகையான ஊழல் என்று கருதப்படுகிறது என்பதை ங் நினைவுறுத்தினார்.