சரவாக் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்தது சரியே- முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

appealசரவாக்கில் தேர்தல் தொகுதி எல்லைகளைத்  திருத்தி அமைத்தது  செல்லாது  என்ற  சரசாக்  உயர்  நீதிமன்றத்  தீர்ப்புக்கு  எதிர்த்து  தேர்தல்  ஆணையம்  செய்த  முறையீட்டை   கூட்டரசு  நீதிமன்றம்  இன்று  ஏகமனதாக  ஏற்றுக்கொண்டது.

இதன்படி  தேர்தல் தொகுதி எல்லைகளைத்  திருத்தி அமைத்தது  சரிதான்  என்றாகிறது.

மூவரடங்கிய  நீதிபதிகள்  குழுவுக்குத்  தலைமை தாங்கிய  நீதிபதி  முகம்மட் ஸவாவி  முகம்மட்  சாலே  முறியீடு  ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும்  அதற்கு  எதிராக  செய்யப்பட்ட  முறையீடு  நிராகரிக்கப்படுவதாகவும்  உயர்  நீதிமன்றத்  தீர்ப்பு இரத்துச்  செய்யப்படுவதாகவும்  அறிவித்தார்.