ஜாஹிட்: எம்ஏசிசி விசாரணையாளர்கள்மீது இனிமேலும் நடவடிக்கை இல்லை

hamidiதுணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி, புதன்கிழமை  போலீசாரால்  கைது  செய்யப்பட்ட  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)  விசாரணையாளர்கள்மீது   மேலும்  நடவடிக்கை  எடுக்கப்படாது  என  உறுதி  அளித்துள்ளார்.

எம்ஏசிசி  அதிகாரிகள், அரசுக்குச்  சொந்தமான  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனம்  ரிம42 மில்லியனை பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  கணக்கில்  போட்டதாகக்  கூறப்படுவதை  விசாரணை  செய்து  வந்தார்கள்.

போலீசார்  அவ்வழக்கு  பற்றிய  தகவல்கள்  கசியவிடப்பட்டது  பற்றி  அவர்களை  விசாரிக்கவும்  வாக்குமூலங்களைப்  பதிவு  செய்யவும்  விரும்பினர்  என்றும் விசாரணைக்கு  உதவியாகத்தான்  அவர்கள்  கைது  செய்யப்பட்டார்கள்  என்றும் ஜாஹிட்  கூறியதாக  பெரித்தா  ஹரியான்  கூறிற்று.

போலீசார்  எம்ஏசிசி-யை  மட்டும்  குறிவைத்துச்  செயல்படவில்லை. மற்ற  நிறுவனங்களையும்  விசாரித்து  வருவதாக  அவர்  மேலும்  கூறினார்.