பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்தக் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் பற்றி விசாரணை செய்து வரும் விசாரணையாளர்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.
சுங்கை பூலோ சிறையிலிருந்து தம் வழக்குரைஞர் மூலமாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நாட்டின் முக்கியமான அமைப்புகள் குறிப்பாக எம்ஏசிசி-யும் பேங்க் நெகராவும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருப்பதாக தெரிகிறது என அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
“விசாரணையாளர்களை மிரட்டுவதையும் அவர்களின் பணியில் குறுக்கிடுவதையும் நிறுத்த வேண்டும் என நஜிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
“நஜிப்பின் அம்பேங்க் கணக்கில் எஸ்ஆர்சி வழியாக ரிம42மில்லியன் மாற்றிவிடப்பட்டிருப்பதை ஆய்வு செய்யும் எம்ஏசிசி அதிகாரிகளை போலீசைக் கொண்டு கைது செய்வது விசாரணை செய்தது தடுத்து வைத்தது ஆகியவற்றைத்தான் இங்குக் குறிப்பிடுகிறேன்”, என்றாரவர்
வாரே,,, இது எல்லாம் உம்னோ காரங்கள் மக்களுக்கு காட்டும் படம் ,,,, நீ அங்கிருந்து வெளிஎற்றப்பட்டவனாசே ,,, உனக்கு தெரியாதா????????
தொல்லை கொடுக்க மாட்டேன் ஆனால் அவர்களுக்கு நிட்சயம் பதவி உயர்வு உண்டு