ஆமாம் சாமிகளால் தன்னை மறந்திருப்பவர்கள் பதவி இறங்க மாட்டார்கள்

dpmநேற்று  பாகோ  அம்னோ  ஆண்டுக் கூட்டத்தில்  முன்னாள் துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினின்  பேச்சு  தம்  முன்னாள்   ‘போஸை’க் குத்திக்  காட்டுவதுபோல்  இருந்தது.

“சில  நேரங்களில்  நம்மைச்  சுற்றியிருக்கும்   ஆதரவாளர்கள், ‘பராவாயில்லை  சார்,  எல்லாம்  நல்லா  இருக்கு,  கவலையே  வேண்டாம்  சார், ஆமாம்  சார்’  என்றெல்லாம்  சொல்லிக்  கொண்டிருப்பார்கள்.

“நாமும்  (தவறுகளை)  கண்டுகொள்ளாமல்  பெருமைப்பட்டுக்  கொள்வோம்.

“(அந்த  மனிதரும்)‘நான்  எதற்காக  பதவி  இறங்க  வேண்டும்? எல்லாம்  நல்லாத்தானே  இருக்கிறது. நிறைய  ஆதரவாளர்கள்  இருக்கிறார்கள். கூட்டங்களுக்குப்  போனால் ஆயிரக்கணக்கானவர்  வருகிறார்கள் என்று  நினைப்பார்.

“நான்  யாரையும்  குறிப்பிட்டுப்  பேசவில்லை. ஆனால்,  அப்படி ஒரு தலைவர்  இருந்தால்  எப்படி  இருக்கும்  என்று  எண்னிப்  பாருங்கள்”, என்று  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  வெளியேற்றப்பட்ட  முகைதின்  கூறினார்.

அந்தத் தலைவரின்  ஆதரவாளர்கள்  ஒரு  முறையேனும், “ஐயா, நீங்கள்  செய்வது  சரியல்ல”, என்று  சொன்னதில்லை  என்றாரவர்.

“அதைத்தான்  நான்  பிரதமரிடம்  சொன்னேன். நான்  செய்தது  தப்பா?”, என்றவர்  வினவினார்.