கடன்களால் தொல்லையுறும் 1எம்டிபி பற்றிச் செய்திகள் வெளியிட்டதற்காக தி எட்ஜ் பத்திரிகை இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டிக்க முன்னூறுக்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டனர்.
கோலாலும்பூர் செண்ட்ரல் மார்க்கெட்டில் கூடிய எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வழக்குரைஞர் மன்றக் கட்டிடத்துக்கு அணிவகுத்துச் சென்றனர்.
அவர்கள் அறிவிப்பு அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் “ஊடகங்களைக் கட்டுப்படுத்தாதே”, “ஊடகங்களுக்கே எங்கள் ஆதரவு” என்றும் முழக்கமிட்டார்கள்.
அக்கூட்டத்தில், பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வொங், பிஎஸ்எம் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன், முன்னாள் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா உள்பட, அரசியல் தலைவர்கள் சிலரையும் பார்க்க முடிந்தது.