பிரதமர்: அம்னோ சமூக வலைத்தளங்களை நிரப்ப வேண்டும்; பொய்ச் செய்திகளை எதிர்க்க வேண்டும்

socialபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அம்னோ கட்சியினர்  சமூக  வலைத்தளங்களில்  ஆதிக்கம்  செலுத்தி  கட்சிக்கும்  தலைவருக்கும்  எதிரான  “பொய்யான  கருத்துகளை”  எதிர்க்க  வேண்டும்  என்றும்  வலியுறுத்தினார்.

“முகநூல் டிவிட்டர்  கணக்குகள் திறங்கள். வலைப்பதிவர்  ஆகாவிட்டாலும் முகநூல் டிவிட்டர் பழக்கமே போதுமானது.

“பொய்யான  கருத்துகளைக்  கண்டால்  அவற்றை  எதிர்க்கலாம்”. செராஸில்  பண்டார்  துன்  ரசாக்  அம்னோ  தொகுதிக்  கூட்டத்தைத்  தொடக்கி  வைப்பதற்குமுன்  நஜிப்  இவ்வாறு  கூறினார்.

“கட்சித்  தலைவர்  தாக்கப்படும்போது  நீங்கள்  திருப்பித்  தாக்கலாம்”, என்றாரவர்.

அம்னோ  உறுப்பினர்கள்  புதிய  அரசியல் “போர்க்களத்தை” அவர்களின்  கட்டுப்பாட்டில்  வைத்திருக்க  வேண்டும்  என்பதை  வலியுறுத்திய  நஜிப்,  மூன்று  மில்லியன்  உறுப்பினர்களும்  சமூக  வலைத்தளப் பயனர்களாக மாறினால் சமூக  வலைத்தளங்களில்  கட்சி கொடிகட்டி  பறக்கும்  என்றார்.