இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் இருவர் பிரதமர் துறை அலுவலகத்திற்கு திடீரென இடம் மாற்றப்பட்டதைக் கண்டித்திருக்கிறார்.
“இப்படிப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எம்ஏசிசி-யை மிரட்டும் வேலையும் நிற்க வேண்டும்”, என்றாரவர்.
எம்ஏசிசியைப் பலவீனப்படுத்த அதற்கு எதிராக நெருக்குதல் கொடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக கைரி குறிப்பிட்டார்.
1எம்டிபி விவகாரத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் இருந்து பிரதமரின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்ட ரிம42மில்லியன் ஆகியவற்றை விசாரணை செய்து வந்த சிறப்பு நடவடிக்கைக்குழுத் தலைவர் பஹ்ரி முகமட் ஸின், வியூகத் தொடர்பு இயக்குநர் ரொஹைசாட் யாக்கோப் ஆகியோரே இடமாற்றம் செய்யப்பட்ட எம்ஏசிசி அதிகாரிகளாவர்.
பஹ்ரி, போலீசார் எம்ஏசிசி விசாரணை அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுத்து வந்திருப்பதாகக் குறை கூறியிருந்தார். போலீஸ் நடவடிக்கைக்குப் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் உறுதி கூறியிருந்தார்.
ரொஹைசாட் வியாழக்கிழமை எம்ஏசிசி தலைமையகத்துக்கு வருகை தந்த எதிரணித் தலைவர்களைச் சந்தித்தவராவார்.
எம்ஏசிசி போன்ற கழகங்கள் சிதைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என கைரி குறிப்பிட்டார்.
மக்களிடையே தப்பான எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க எம்ஏசிசி இடையூறின்றி அதன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
“இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தொடருமானால் நம் கழகங்கள்மீதும் அரசாங்கத்தின்மீதும் மக்களுக்குள்ள நம்பிக்கை கரைந்து போகும்”, என்றாரவர்.
அப்படியா??? எங்கே உங்கள் கூவல்படி மாற்றலாகிச் சென்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக கொடி பிடித்து நின்று பாருங்கள்!! வெறுமனே , வெத்து அறிக்கை விடுவதில் எங்க ஊரு குப்பனும் சுப்பனும் உம்மை விட வல்லுனர்கள்!!!!
மிரட்டல் நாடகம் அம்னோவுக்கு என்ன புதிதா?
அட இப்பதான் சந்தேகம் எழுகின்றதா?. இவரும் மூழ்கும் கப்பலில் இருந்து வெகு விரைவில் கழற்றிக் கொள்வார் போலிருக்கு.
ஆடு நனையுது ஓநாய் அழுவுது . முதலில் உங்கள் தலைவரை நல்ல ஆட்சியை செய்ய சொல்லுங்கள்.நாணய மதிப்பு படு வீழ்ச்சியில் உள்ளது.அதை திருத்த வழியை பாருங்கள்.
jangan lawan BOS Laa.