அரசியல் நிதி பெறுவது கட்சியின் வழக்கமான நடைமுறை. அம்னோவின் தலைவர் என்ற முறையில் தாம் அதனைத் தொடர்ந்து பின்பற்றியதாக நஜிப் இன்று கூறினார்.
கட்சி மற்றும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிதி திரட்டுவது கட்சித் தலைவரின் கடமையாகும். இதற்கு முன் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதே இல்லை என்றும் அவர் கூறினார்.
“நான் துணைத் தலைவராக இருந்த போது, கட்சியின் நிதிகள் குறித்து கேள்வி கேட்டதே இல்லை; அது கட்சித் தலைவரின் வேலை.
“(இது) மகாதிர் காலத்திலும்கூட நடந்தது… நான் அந்த நடைமுறையைத்தான் பின்பற்றினேன்”, என்று ஜோகூர், பாசிர் கூடாங் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய நஜிப் கூறினார்.
அட ……. பிரதமரே, கட்சி பணத்தை சொந்த கணக்கிலும் ………….. கணக்கிலும் போடுவதுதான் உங்கள் அரசியல் நடைமுறையாக இருக்கிறதா…..