அரசியல் கட்சி நிதி: பிரதமரின் சவாலை டிஎபி ஏற்றுக்கொள்கிறது

 

Guan Eng CMஅம்னோ அதன் அரசியல் நிதிக் கணக்கை காட்டத் தயார். டிஎபி அதன் அரசியல் நிதிக் கணக்கை காட்டத் தயாரா என்று பிரதமர் நஜிப் ரசாக் டிஎபிக்கு சவால் விட்டிருந்தார்.

அந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதாக டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் ரிம2.6பில்லியன் வைக்கப்பட்டிருந்த விவகாரம் சம்ப்ந்தமாக இச்சவால் எழுந்தது.

ஒரு டிஎபி நிகழ்ச்சியில் பேசிய குவான் எங், “முதலில் உம்முடையதைக் காட்டும், பிறகு நான் என்னுடையதைக் காட்டுகிறேன்” என்று நஜிப் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட அவர், “இவர் எந்த மாதிரியான பிரதமர்” என்று கேட்டதும் கூட்டத்தினர் சிரித்தனர்.

அதன் நிதி நிலையை வெளிப்படுத்த டிஎபி அஞ்சவில்லை, ஏனென்றால் பினாங்கில் டிஎபியின் நிருவாகம் வெளிப்படையானது என்றாரவர்.

“நாங்கள் எல்லாவற்றையும் காட்டியுள்ளோம். (நீங்கள்) காட்ட விரும்பினால், காட்டுங்கள்-லா. நாங்கள் அஞ்சவில்லை”, என்று பினாங்கு, தஞ்சோங் பூங்காவில் நடைபெற்ற தற்காலிக கிளைகளின் சிறப்புக் கூட்டத்தில் குவான் எங் கூறினார்.