பிரதமர் நஜிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களுடன் சேர்ந்து ஒரு நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை நடத்த முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.
இதற்கு முன்னதாக நேற்று இரு எதிரணித் தலைவர்கள், டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவரும், முகைதின் யாசினை இவ்விவகாரம் குறித்து சந்தித்தாக கூறப்பட்டதை அவர்கள் மறுத்துள்ளனர்.
லிம் மற்றும் அஸ்மின் ஆகிய இருவரும் இதனை மறுத்து விட்டனர். ஆகவே தாமும் கூட அதை மறுக்க வேண்டிய தேவை இல்லை என்றார் முகைதின்.
“ஆனால், இதைத் தெளிவுபடுத்துவதற்காக – நான் சம்பந்தப்படவில்லை”, என்று அம்னோவின் துணைத் தலைவரான முகைதின் யாசின் பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதி அம்னோ இளைஞர் பிரிவு பேராளர் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
அடுத்து இவர் யூதர்களின் ஏஜென்ட் என்று அமினோ வலைத்தளங்கள் பிரகனப்படுத்தும். அமீனோ கட்சியில் ஒருத்தரை சாகடிக்க வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள் இவர்கள்.
ஆமாம்!! பகல் கொள்ளை, கொலை மற்றும் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றி யாரேனும் வாயைத் திறந்தால், உடனே அவர்கள் எதிர்க்கட்சி கூட்டணியுடன் சதித் திட்டம் போடுகின்றனர் என்று முத்திரை குத்திவிடுவீர்கள்!! ஒருசிலரை சட்ட அமுலாக்க இலக்கா மிரட்டவும் செய்கிறது! சந்தேகப் பேர்வழியோ சட்ட அமுலாக்க இலாக்காவை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படியாவது தப்பித்திட வேண்டுமென்று இயன்றளவில் எல்லாவற்றையும் மூடி மறைக்க போராடுகிறார்!!!