‘ஜனநாயகம் செத்து விட்டது, நஜிப்பை விசாரிப்பீர்’

demoபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  ஆட்சியில்  மக்களாட்சி  செத்து  விட்டது  என்று  அறிவித்திருக்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“அது  செத்து  விட்டது.  ஏனென்றால்,  தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவர்  ஒருவர்  அரசாங்க  அமைப்புகளைத்  தலைகீழாய்ப்  புரட்டிப்போட்டு  அவற்றைத்  தம்  பதவியைக்  காத்துக்கொள்ளும்  கருவிகளாகப்  பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

“இனி  ஜனநாயகத்துக்கு  யாரும்  குழிபறிக்க  முடியாது, ஏனென்றால்  அப்படி ஒன்று  இல்லை”, என  மகாதிர்  அவரது வலைப்பதிவில்  பதிவிட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற  மக்களாட்சிக்கு  விரோதமான  நடவடிக்கைகளில்  ஈடுபட்டதாகக்  கூறி  போலீஸ்  பலர்மீது  நடத்தும்  விசாரணை  குறித்து  மகாதிர்  கருத்துரைத்தார்.

“1எம்டிபி பற்றிப்  பேசுவது இல்லாத  ஒன்றுக்கு (ஜனநாயகத்துக்கு)  குழிபறிப்பதாகாது.

“போலீசார்  யாரையாவது  விசாரிக்க  வேண்டுமானால்  நஜிப்பைத்தான்  விசாரிக்க  வேண்டும்”, என்றாரவர்.