வெள்ளிக்கிழமை பிரதமர் துறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் அவர்களின் பழைய பணியிலேயே இன்று திரும்பவும் அமர்த்தப்பட்டனர்.
அவ்விருவரும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவையும் பொதுச்சேவைத்துறை தலைமை இயக்குனர் முகம்மட் ஸபிடி சைனாலையும் சந்தித்த பின்னர் இது நடந்தது.
எம்ஏசிசி சிறப்பு நடவடிக்கை இயக்குனர் பாஹ்ரி முகமது ஸின் மற்றும் வியூகத் தொடர்பு இயக்குனர் ரொஹைசாட் யாக்கூப் ஆகிய இருவரும் பிரதமர் துறை அலுவலகத்தில்(பிஎம்ஓ) இன்று வேலை தொடங்குவதாக இருந்தது.
“இருவரும் ஊடக அறிக்கை வெளியிட்டதற்கான காரணத்தைத் தெரிவித்தார்கள். அவர்களின் விளக்கத்தைக் கேட்ட பின்னர் அவர்கள் பிஎம்ஓ-வுக்கு இடமாற்றம் செய்யப்படுவதை இரத்துச் செய்ய முடிவெடுத்தேன். இன்று தொடங்கி அவர்கள் பழைய இடத்துக்கே திரும்பிச் செல்வார்கள்”, என அலி ஹம்சா ஓர் அறிக்கையில் கூறினார்.
நாங்கள் உங்கள் பதிலை நம்பி விட்டோம் …..
மலேசிய மக்களை இன்னமும் மடையர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறிர்கள் ….
இனி அவர்கள் ஊமை . எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று ஒதுங்கி விடுவார்கள் . வாழ்க நமது நம்பிக்கை “NAYAGUN”.
எம் எ சி சி தான் உங்களுக்கு பலமான ஆப்பு வைக்க முடியும் !
வேலை பழைய பாணியில் இருக்குமா? புதிய பாணியில் இருக்குமா?
நாம் நாட்டில் வெள்ளை கக்க சிக்கிரம் பரக்கம்