இளைஞர் அணி ஒன்று அரசாங்கத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க ஒர் எளிய வழியைக் கண்டுபிடித்திருகிறது: பட்டப்பகலில் காரின் முன்விளக்கைப் பளிச்சென எரியவிடுவதுதான் அது.
மலேசியாவைக் காப்போம் இளைஞர் அணியினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஐந்து தீர்மானங்களில் இதுவும் ஒன்று.
அதன் இதர நான்கு தீர்மானங்கள்:
-பெர்சே 4.0 பேரணிக்கு ஆதரவு திரட்டுதல்,
– நாட்டைக் காக்க ஒரு பணிப்படை அமைத்தல்,
-#SelamatkanMalaysia (மலேசியாவைப் பாதுகாப்போம்) இயக்கத்தை மின்னியல் தளங்களில் பிரபலப்படுத்துதல்,
-நாட்டுக்குத் துரோகமிழைத்த தலைவர்களையும் ஊழல்மிக்க தலைவர்களையும் வெளியேற்றுதல்.
யான் ஊட்டு காருலே ஏண்டா உங்க பிரச்சனையை காமிக்கணும்? நாட்டுக்கு துரோகம்,ஊழல் இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுதா? அட முட்டா பீசுங்களா! அது வேற ஒன்னும் இல்ல;பழைய திருடனுங்களுக்கு காலா காலமா போய் சேர வேண்டிய மாமுல் தடங்கல் ஆச்சு! அதனால இவ்வளவு ஆர்ப்பாட்டம்,சௌண்டு எல்லாம் வருது…
நாடும் மக்களும் நலம் பெற எந்த நடவடிக்கையும் ஆதரவுக்குறியது!!!
நாட்டை காக்கும் பணிபடைக்கு “மஞ்சள்” நிறம்” என்றால்
பிரதமரை காக்கும் பணிபடைக்கு UMNO-வின் “சிவப்பு நிறமா” ?
சபாஷ் ! தலைநகர் மட்டுமின்றி நாடே “COLOURFULL”-லாக கலகலக்க போகின்றது. அப்புறம் என்ன நலிவடைந்திருக்கும் தையல் தொழிலுக்கு பிரதமர் மூலம் விமோசனம் கிடைச்சாச்சு.