ரிம2.6 பில்லியன் நன்கொடை என்பதை ‘bulls**t’ என்கிறார் மகாதிர்

Mahathir-Sultanபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ரிம2.6 பில்லியன்  நன்கொடையாகக்  கிடைத்தது  என்று  கூறிக்கொள்வதைக்  கேலி  செய்யும்  கூட்டத்தினருடன்  டாக்டர்  மகாதிரும்  சேர்ந்து  கொண்டிருக்கிறார்.

“மலேசியப்  பிரதமருக்கு  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  கொடுப்பவர்  யார்,  ஐயா?

“ஒபாமாவால்  அவரது  அதிபர்  தேர்தலுக்குக்கூட  இவ்வளவு  பெரிய  தொகையைத்  திரட்ட  முடிந்ததில்லை. அரபுக்காரர்  ஒருவர்  கொடுத்ததாகச்  சொல்லப்படுகிறது.

“அராபியர்கள் தாராள  மனம்  கொண்டவர்கள்தான். ஆனால், இவ்வளவு  தாராளமானவர்கள்  அல்லர்”, என  மகாதிர் அவரது  வலைப்பதிவில்  கூறினார்.

“நன்கொடை” எனப்படுவதை  மக்கள் “கண்துடைப்பு  என்றும் ‘bulls**t’”, என்றும்   சொல்கிறார்கள்  என்றாரவர்.

“நான்  அதை  நம்பவில்லை, சமூக  வலைத்தளங்களைப்  பார்க்கையில்  பெரும்பாலான  மலேசியர்களாலும்  நம்ப  முடியவில்லை. உலகம்  கைகொட்டிச்  சிரித்தது”, என்றாரவர்.

மலேசியாவில்  அனைத்துலக  இஸ்லாமிய  பல்கலைக்கழகத்தை அமைத்தபோதும்  ஒக்ஸ்போர்ட்  இஸ்லாமிய பிரிவை ஏற்படுத்தியபோதும்  அபுக்களிடமிருந்து  சல்லிக்  காசு  கிடைக்கவில்லை  என்று  முன்னாள்  பிரதமர்  கூறினார்.