பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குத்தான் அரசாங்கம் இப்போது முக்கிய கவனம் செலுத்துகிறது எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் முகம்மட் சாலே சைட் கெருவாக் கூறினார்.
“பல சிக்கல்களை எதிர்நோக்குகிறோம். ஆனால், நாம் அதற்குக் காரணமில்லை. எண்ணெய் விலைகள் குறைந்ததுதான் காரணம். அதனால் மலேசிய ரிங்கிட் பாதிக்கப்பட்டது; வேறு பல நாடுகளும் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளன”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கதை கதையாம் காரணமாம்! RM2.6 பில்லியன் நன்கொடைக்கு காரணத்தைச் சொல்லுங்கப்பான்ன இங்க பாரு அங்க பாரு என்று இவர் பாயாஸ் கோப்பு படம் காட்டுகின்றார்!. பல சிக்கல் ஏன் வந்தது?இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரான முறையில் நிருவகிக்காததால் வந்த வினை. யார் குற்றம்? அமீனோ அரசாங்கத்தின் குற்றம். இதற்கு மேல நீங்க பொருளாதாரத்தை ஒன்னும் மேம்படுத்துவதர்க்கில்லை. கீழே போகாமல் பார்த்துக் கொண்டாலே புண்ணியம். மலேசியா வெள்ளியின் மதிப்பு வீழ்ச்சி போதுமே நீங்கள் பொருளாதாரத்தை நடத்தும் இலட்சனத்தைக் காட்ட. பொறுங்கடா இன்னும் இரண்டே மாதத்தில் இந்த நாட்டின் பொருளாதாரம் ஊத்திக்கப் போகுது. அப்புறந்தான் மக்கள் நடுத்தெருவிற்கு இறங்கப் போகின்றார்கள். அதற்கப்புறம் இராணுவமே வந்தாலும் இந்த அமீனோ அரசாங்கத்தைக் காப்பாற்ற முடியாது மவனே.
யாருடைய பொருளாதாரத்தை மேம்படுத்த கவனம் செலுத்துகிறீர்கள்? நஜிபா? ரோஸ்மாவா? அம்னோ அன்னக்காவடிகளா?
இந்த அரசாங்கமே, அவரவர் சொந்த பொருளாதாரத்தை மேம்படுத்தத்தானே மக்கள் சேவை என்ற போர்வையில் மக்களையே மொட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர்!!!!
நம்பிக்கை நாயகர் நா சுப்பு அரசுக்கு தலைமை ஏற்றதும் தனது பொருளாதாரத்தை 2.6பில்லியனுக்கு உயர்த்திட்டாரே இன்னும் உயர்த்திக்கொள்ள மக்கள் விடமாட்டங்கறாங்களே!நா சுப்புவை பற்றி
கோப்பி கடை.பசார்பகி .மாளலாம் எல்லாம் பேச்சா இருக்குங்கேறேங்க
பல்லுடகத்துக்கு பல்கா சில்லறையா ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
ங்கிறேன்!.