‘மகாதிருக்குக் கொடுக்கப்பட்ட துபோல் நஜிப்புக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்’

razif1998-இல்  அன்வார்  இப்ராகிம்  விவகாரத்துக்குத்  தீர்வுகாணும்  பொறுப்பு  அப்போதைய  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டிடம்  ஒப்படைக்கப்பட்டதுபோல்  1எம்டிபி-க்குத்  தீர்வுகாணும் பொறுப்பைப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  ஒப்படைப்பதே  முறையாகும்  என்கிறார்  திரெங்கானு  மந்திரி  புசார்  அஹமட்  ரஸிப்  அப்ட்  ரஹ்மான்.

“இன்ஷாஅல்லா, நஜிப்புக்கு  அவகாசம்  கொடுப்போம், அன்வார்  விவகாரத்தில்  மகாதிருக்குக்  கொடுத்ததுபோல். இப்போது  நாம்  எதிர்நோக்கும்  பிரச்னைகளுக்குத் தீர்வுகாண  பிரதமருக்கு  ஏன் அவகாசம்  கொடுக்கக்கூடாது?

“ஐந்து  மாதங்கள்தானே,  பிரதமர்  என்ன  செய்கிறார்  என்பதைப் பார்ப்போம்”, என்று  அஹ்மட்  ரஸிப்  தெரிவித்ததாக  சினார்  ஹரியான்  கூறியது.

1எம்டிபி-இன்  கடன்களை  எல்லாம் ஐந்தே  மாதங்களில்  தீர்த்து  விடுவதாக   நஜிப்  வாக்குறுதி  அளித்துள்ளார்.