பெர்னாண்டஸ்: இணையத்தை விட்டுவிட்டு ரிங்கிட்டில் கவனம் செலுத்துங்கள்

tonyபுத்ரா  ஜெயா,  இணையத்தில்  தகவல்  பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும்  முயற்சிகளைக்  கைவிட்டு  ரிங்கிட்டின்  மதிப்பு  சரிந்து  வருவதைத்  தடுத்து  நிறுத்துவதில்  கவனம்  செலுத்த  வேண்டும்  என  ஏர்  ஏசியா  தலைவர்  டோனி  பெர்னாண்டஸ்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அரசாங்கம்  இணையத்தைக்  கட்டுப்படுத்துவதை  விடுத்து  ரிங்கிட்டின் மதிப்பை  நிலைநிறுத்துவதில்  கூடுதல்  நேரத்தைச்  செலவிட  வேண்டும்.

“கூடுதல்  வேலைவாய்ப்புகளை  உருவாக்குவது  எப்படி,  பொருளாதாரத்தை  முடுக்கி  விடுவது  எப்படி  என்பதில்தான்  கவனம்  செல்ல  வேண்டும். அதற்குத்தான்  முன்னுரிமை  கொடுக்கப்பட  வேண்டும்.  வேறு  எதுவும் அதைவிட  முக்கியமானதாக  எனக்குப்  படவில்லை”, என்றாரவர்.

நாட்டின்  அரசியல்  நிலவரம்தான் ரிங்கிட்டின்  சரிவுக்குக்  காரணமா  என்று  வினவியதற்கு, “அரசியல்  நிலவரம்  உதவிகரமாக  இல்லை  என்றே  நினைக்கிறேன்”, என்றார்.