பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தல் குற்றங்கள் புரிந்ததாக பிகேஆர் சிவில் வழக்கு தொடுத்துள்ளது.
இன்று பதிவுசெய்யப்பட்ட அவ்வழக்கில், நஜிப்புடன் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரும் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனமும் (1எம்டிபி), தேர்தல் ஆணையமும் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்தார்.
“இது வால் ஸ்திரிட் ஜர்னல் அம்பலப்படுத்தியதன் தொடர்ச்சி………
“அதில் 13வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற பாரிசான் நேசனல் கடைப்பிடித்த எல்லாவகை ஊழல் நடவடிக்கைகளும் தெரியவந்துள்ளன.
“ரிம2.6 பில்லியன் என்பது சட்டங்களில் (தேர்தலுக்கு) அனுமதிக்கப்பட்டதைவிட 26 மடங்கு அதிகமாகும்”, என நூருல் இஸ்ஸா கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
எந்த நீதிபதி இதை விசாரிக்கப் போகின்றார் என்று நிர்னையப் படுத்துவது யார்?. வழக்கில் வெற்றிப் பெற வழக்கு என்ன என்பது முக்கியம்மல்ல. யார் நீதிபதி என்பதே முக்கியம். சும்மா வெட்டி வேலை செய்யாம அடுத்த தேர்தலுக்கு இப்பவே தயாராகுங்க.
நீதி பரிபாலனம் அமச்சரவையின் கீழ் செயல்படும் வரை உண்மைக்கும் நேர்மைக்கும் நீதி கிடைப்பதென்பது மக்கள் அறிந்ததே!!! இந்த அயோக்கியத தனத்தையும் அட்டூழியங்களையும் காணக் கூடாது என்பதற்காக நீதி தேவதையின் கண்ணைக் கட்டிவிட்டனர்???
வழக்கு தொடுப்பதைவிட அடுத்த பொதுத்தேர்தல் கவனியுங்கள்.மாற்றம் அதுவே சிறந்த முக்கியத்துவம்.