ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் நிதி அமைச்சையும் கண்காணித்து வரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மெளனமாக இருப்பது கண்டு வியப்படைகிறார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
“ரிங்கிட்டின் வீழ்ச்சிக்குக் கவலை தெரிவிக்கும் அறிக்கை ஒன்றுகூட வரவில்லை என்பது விசித்திரமாக இருக்கிறது”, இருக்கிறது என வொங் சென் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ்மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக வதந்திதான் வந்து கொண்டிருக்கிறது. இது அரசாங்கம் 1எம்டிபி விவகாரத்தைக் கையாளும் விதத்தின்மீது நம்பிக்கை இழக்க வைக்கிறது.
“இவையெல்லாம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை”, என்றாரவர்.
இதனைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது நஜிப் நிதி அமைச்சர் பதவியைத் துறப்பதுதான் நல்லது என வொங் சென் கூறினார்.
”அவன்தான் மலை பாம்பு மாதிரி பணதையெலாம் விழிங்கிட்டு நான் எந்ததப்பும் செய்யலனு கதை விடரானே. அவன் நான்தான் எப்படி ஒத்துக்கொள்வான். அவன நாமதான் அடிச்சி விறட்டனும்.