பேரணியில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி கூடாது: பெர்சே-க்கு போலீஸ் எச்சரிக்கை

noorபெர்சே 4  பேரணியின்போது  சட்டவிரோதமான  வழிகளில்  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால்  போலீஸ்  நடவடிக்கை  எடுக்கும். போலீஸ் படைத் துணைத்  தலைவர்  நூர்  ரஷிட்  இப்ராகிம்  இவ்வாறு  எச்சரித்தார்.

கூட்டரசு  அரசமைப்பின்படி  ஒன்றுகூடும்  உரிமை  மக்களுக்கு  உண்டு  என்றாலும்   சட்டமீறல்களும்  நிகழத்தான்  செய்கின்றன  என்பதை அவர்  தேர்தல்  கண்காணிப்பு  அமைப்புக்கு  நினைவுறுத்தினார்.

“அனுமதிக்கப்படாத  வழிகளில்  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  நினைத்தால்  அது  ஒரு  குற்றமாகும். போலீஸ்  அப்போது  தலையிடும்”, என்றாரவர்.

பெர்சே  பேரணியினர்  இரவுமுழுக்க  டட்டாரான்  மெர்டேகாவில் தங்கியிருக்க  போலீஸ்  அனுமதிக்குமா  என்று  கேட்டதற்கு   அவர்  இவ்வாறு  பதிலளித்தார்.

பேரணி  அமைதியாக  நடந்து  பொதுமக்களுக்கு  அதனால்  பிரச்னை  ஏதுமில்லை  என்றால்  போலீஸ்  தலையிடாது  என  நூர்  ரஷிட்  தெரிவித்தார்.

“அமைதியான  பேரணி  நடத்த  விரும்புகிறீர்களா,  ஒரு  நாளா, ஓர்  இரவா, இரண்டு  நாள்களா, இரண்டு  இரவுகளா,  மூன்று  நாள்களா,  ஒரு மாதமா  பிரச்னையே  இல்லை.

“ஆனால், மக்களுக்குப்  பிரச்னை  உண்டு  பண்ணினால், மக்களின்  மனத்தைப்  புண்படுத்தும்  அறிக்கைகள் விடுத்தால், மற்றவர்களுக்கு  இடையூறாக  இருந்தால்,  தொல்லையாக  இருந்தால்  போலீஸ்  நடவடிக்கை  எடுக்கும்”, என்றாரவர்.