ஆகஸ்ட் 29-30 இல் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே 4 பேரணி அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனையல்ல. அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் துணை உள்துறை அமைச்சர் நூர் ஜாஸ்லான் முகமட் கூறினார்.
அமைதியான முறையில் நடத்தபடும் பேரணிகள் பற்றி தமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், எந்தப் பிரச்சனையும் எழாத வரையில் அப்பேரணி நடத்தப்படலாம் என்று போலீசார் தெரிவித்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஆனால், பேரணி ஏற்பாட்டாளாரான பெர்சே பேரணியில் பங்கேற்கும் கூட்டத்தினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அதிகாரத்துவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நூர் மேலும் கூறினார்.
ஹின்ராப்பினால் கற்றுக் கொண்ட பாடத்தை இந்த அரசாங்கம் இன்னும் மறக்கவில்லை என்று புரிகின்றது மந்திரியாரே.
உங்கள் அம்னோ குண்டர்களை ஏவிவிட்டால் அப்புறம் எங்கே கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியும்?
பதவிக்காக கடமையை புறக்கணித்து தன்மானத்தை அடகு வைத்தோரில் இவரும் ஒருவர் தானே ???
ஹிண்ட்ராப் பேரணி அமைதியாக நடந்தே பிறகு ஏன் ஆத்துமீறல்?