அண்மைக் காலமாக இறங்குமுகம் காட்டிவந்த ரிங்கிட் இன்று காலை டாலருக்கு எதிராக சற்று ஏற்றம் கண்டிருந்தது.
காலை மணி 9.30க்கு டாலருக்கு 3.9900/9970 என்று பரிவர்த்தனை நடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு அது 4.0375/0415 என்றிருந்தது.
இன்று வெளியிடப்படவுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்திமீதான (ஜிடிபி) இரண்டாம் காலாண்டு அறிக்கை நல்ல செய்திகளைக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கைதான் ரிங்கிட் சற்றே ஏற்றம் கண்டதற்கான காரணம் என்று கூறப்பட்டது.