பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ்மீது விசாரணை நடப்பதாக வதந்திகள் கூறினாலும் அவர் பதவி விலக மாட்டார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸெட்டி, தம் ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்து விட்டுத்தான் பதவி விலகப் போவதாகக் கூறினார். அது 2016-இல் முடிவடையும்.
“பதவிக்காலம் முடியும்வரை பதவியில் இருப்பேன்”, என இரண்டாம் காலாண்டு ஜிடிபி புள்ளிவிவரங்களை அறிவிப்பதற்காகக் கூட்டப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
பேங்க் நெகாரா அதிகாரிகள் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படுவது பற்றி வினவியதற்கு மத்திய வங்கி அவ்விவகாரத்தை ஆய்வு செய்வதாகக் கூறினார்.
அம்மா
தாயே
போதும உன் சேவை
காலம்
இப்பொழுது அம்மா தாயே போதும உன் சேவை காலம் இப்பொழுது ரிங்கிட் மதிப்பு ரொம்பவும் நேரூகிடி களத்தில் இப்பொழுது உள்ளது. உங்கள் மதிப்பு குறையும் முன்னே விலகி விடுங்கள். ரொம்பவும் பெயர் போன நீங்கள் வேண்டாம் இனியும். நீங்கள் ஒரு நல்ல மனிதர் அரசியல் விளையாடு உங்களுக்கு தெரியது என்று .நினைக்கிரேன்
இன்னும் நமது உள்நாட்டு வங்கிகளில் ‘பண ஓட்டம்’ நிகழாமல் இருப்பதர்க்குக் காரணம் ஸெட்டி தொடர்ந்து பேங்க் நெகரா கவர்னர் பதவியை வகிப்பதுதான். அவரை நீக்கினால் அடுத்து நமது பொருளாதாரம் உடனடியாகவே ஊத்திக்கும். அதனால் அவர் பதவி கொஞ்சம் பாதுகாப்பாகத்தான் இருக்கு.
உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால்….. என்ன செய்வீர்களோ அதை செய்யுங்கள்.
இவர் பதவி விலகினால் என்ன விழாவிட்டால் என்ன நமக்கு வேண்டியது மக்கள் சிறப்பாக வாழனும் அதற்கு என்ன வலி.மக்கள் கையில் தான் இருக்கு தீர்ப்பு.
நல்ல கூட்டு முயற்சியின் முடிவு .நீங்கள் பண விசயத்தில் அனுபவசாலி ????????