டாக்டர் மகாதிர் முகம்மட் நஜிப்பைக் குறைசொல்லாமல் ‘வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்’ என்று அரசியல் எழுத்தாளரான சைட் உசேன் அலாட்டாஸ் வலியுறுத்தியுள்ளார்.
22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதிரால் மலாய்க்காரர்களின் நிலையை மேம்படுத்த முடியவில்லை என்பதால் அவர் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாரவர்.
“அவரிடம் வாயைப் பொத்திக்கொண்டிருக்கச் சொல்லுங்கள். சைட் உசேன் சொன்னதாகச் சொல்லுங்கள்.
“அவர் பேச வேண்டியதெல்லாம் பேசி விட்டார். 22 ஆண்டுக்காலம் பிரதமராக இருந்த அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
“மலாய்க்காரர்களை அவரால் மாற்ற இயலவில்லை. அதில் அவர் தோல்வி கண்டார். மலேசிய அரசியலில் அவரே மிகப் பெரிய தோல்வி கண்டவர்”, என சைட் உசேன் கூறினார்.
சைட் உசேன், நேற்று பகாங், ஜெண்டா பாய்க்-இல் அவரது இல்லத்தில் ‘Dosa-dosa Che Det’ (ச்சே டெட்டின் பாவங்கள்) என்ற நூலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
che det என்பது மகாதிரின் புனைபெயராகும். எழுதும்போது அவர் இப்பெயரைப் பயன்படுத்துவார்.
“JANDA BAIK” – இந்நூலை வெளியிட தேர்ந்தெடுத்த இடத்தை நினைத்தாலே, உங்களுடைய “அற்ப புத்தி” பளிச்சென தெரிகிறது.
கடைசியில் கர்ம வினை இப்படியா ?….சொந்த ரத்த மக்களை …படுபாதாளத்தில் தள்ளி பதவிக்காக மலாய் வேடம் போட்டு ..மலாய் மக்களுக்கு எல்லாம் செய்த மாமா குட்டிக்கு .மலாய் காரர்களே ..சாணி எறிகின்றார்கள் ..விரைவில் pendatang மகாதிர் என்று சொல்லுவார்கள் ..யார் கண்டார் கடைசியில் இந்தியர்களிடம் தான் அடைக்கலம் புகுவாரோ ???பாவ மனிப்பு கோருவாரோ ?
நீயும், ஒரு இணைய பக்கத்தை திறந்து, திடீர் கோடீஸ்வரனுக்கு ஆதரவாக நிறைய பதிவு செய்யலாம்!!! மக்களின் ஆதரவுக்காக போராடும் தருணத்தில், நன்கொடைப் பணம் புரளும் கைகளிலிருந்து உமக்கும் (திடீர் சுக்கிரன்) கொட்டோ கொட்டுன்னு கொட்ட வாய்ப்பு நிறையவே உள்ளது!!!
திரு சைட் உசேன் அவர்களே வணக்கம் . மகாதீர் அவர்களால் மலாய் இனத்தை மேம்படுத்த முடியவில்லை, தூக்கிவிடமுடியவில்லை என கூறியுள்ளிர்கள். அவரின் காலத்தில் மலாய் இனத்திற்காக செய்தது பலகோடி . இந்தியர்களையும் ,சீனர்களையும் ஓரங்கட்டி , அவர்களிடம் உள்ளவற்றை நேரிடையாகவும்,மறைமுகமாகவும் பறித்து, மலாய் இனம் உயர பல வழிகளில் உதவி உள்ளார்.கொடுத்து கொடுத்து கைரேகை அழிந்து, அவர் கை வீங்கிபோனதுடான் மிச்சம்.
அவரே ஒரு முறை அழுதவண்ணம் அம்னோ கூட்டதில் ‘எவ்வளவோ செய்துவிட்டேன் ,தயவு செய்து ஊன்றுகோல் இன்றி வாழக்கற்றுக்கொள்ளுங்கள்’ என
கூறினார். அதன் அர்த்தம் ‘ சோம்பேறியாகவும், கையூட்டு வாங்கும் இனமாக மலாய் சமுகம் இருக்கவேண்டாம் என்பதனை கூறினார் என்பதனை உலகமே அறியும் . அது போக படிக்கதெரியாத இனம்,குறிப்பாக ஆங்கிலம் அறவே புரியாது என்பதனால் ,உலகமொழியை அகற்றி மலாய் மொழியினை நிலை பெற செய்தார் . இதன் காரணமாக தமிழரும்,சீனரும் பட்ட, தொடர்ந்து பட்டுவரும் துன்பம் வார்த்தையால் கூற இயலாது.
திரு சைட் உசேன் அவர்களே! உங்களின் சொற்பொழிவை உங்களின் இனங்களிடம் சொல்லி ஏமாற்றி பிழைக்கலாம், அறிவு உள்ள , நட்டு நடப்பு தெரிந்த எங்களிடம் பலிக்காது . நன்றி .
மகாதீரை குறை சொல்வதற்கு இவருக்கு அனுபவம் இல்லை,பக்குவம் இல்லை காரணம் இவைகள் இருந்திருந்தால் இவர் இப்படி ஒரு குற்றத்தை சொல்லிருக்க மாட்டார்.மகாதீர் மலைகாரர்களுக்கு ஒன்றுமே செய்ய வில்லை என்று,ஒரு வேலை இவர் 22 ஆண்டுகள் குபேரன் தூக்கம் போடிருபார் போலிருகிறது.பட்ச பொய்
T .SIVA நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை– 80க்கு முன் கோலாலம்பூரில் இவ்வளவு மலாய்க்காரர்களை பார்க்க முடியுமா?அவர்கள் இருக்க கூடாது என்று சொல்லவில்லை – ஆனால் இப்போது எல்லா நிலைகளிலும் யார் உயர்ந்த நிலையில் உட்கார்ந்து இருக்கின்றனர்? இவர்கள் எல்லாம் எங்கிருந்து திடீர் என்று வந்தனர்? எங்கு கை வைத்தான்களோ எதுவுமே உருப்பட வில்லை. MAS MHS aviation இது போன்ற நிறுவனங்கள் எல்லாம் இவன்கள் கையில் என்ன ஆன? இது போன்று எவ்வளவோ.
முதலில் நீ உன் திருவாயை மூடுடுடா
கம்பத்தில் வாழ்ந்து நகரத்தில் அமர்த்திய காகாதிரே உனக்கு கிடைத்த பரிசு வாய் மூடு.இவ்வளவு செய்தும் உன்னை துப்புகின்றனர் அனால் எங்களை தூக்கி எறிந்தாயே எங்கள் நிலை எப்பிடி இருக்கும் என்று யோசித்துப்பார். அனைவரையும் அரவணைத்து ஆட்சி செய்திருந்தால் இன்று இந்த துப்பு வருமா?
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களே! உடனே தெய்வம் தண்டிக்காதது ஏன்?
காலம் என்னும் நியதியின் அடிப்படையில் தான் வாழ்க்கை நிகழ்கிறது. நாம் அனுபவிப்பது நல்லதோ, கெட்டதோ அதற்கு மூலமுதற்காரணம் நாம் தான். வித்தில்லாமல் மரம் முளைப்பதில்லை. ஆனால், விதைத்தவுடன் பலன் கிடைப்பதில்லை. அதற்கான காலம் கனிந்தவுடன் மரம் பூக்கிறது. காய்க்கிறது. கனிகளைத் தருகிறது. அதுபோல, நாம் செய்த செயலுக்கான பலனை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். இதையே தீதும் நன்றும் பிறர் தரவாரா என்று நம் முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். காலதேவனின் கணக்கிற்கு எட்டாத விஷயம் எதுவுமில்லை. அவன் கண்ணிலிருந்து யாரும் தப்பமுடியாது. இதையே எல்லாம் காலம் பார்த்துக் கொள்ளும் என்று சொல்வார்கள்.
http://temple.dinamalar.com/news_detail.php?id=9400
நாங்கள் பிச்சை வாங்கித்தான் பிழைப்போம் என்று ஒரு மனப்பான்மையை அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டப் பிறகு அவர்கள் எந்தக் காலத்திலும் மேன்மையடைய முடியாது! நிரந்தர அடிமைகள்!
எல்லாம் முடிந்து இப்பொழுது செருப்பு பேச ஆரம்பித்துவிட்டது .
ஜோஹோர் பட்டத்திளவரசர் அறிக்கையை படித்துவிட்டு பிறகு அறிக்கை விடுவது நல்லது!! அவரின் காலைக் கழுகிய நீரைக் குடித்தாலும் உங்களைப் போன்றோருக்கு தெளிவு பிறக்காது!! இளவயதில் எத்தனை தெளிவு!! வாழ்க! ஜோஹோர் மன்னரும் பட்டத்திளவரசரும்!!!
“ஐயாT.சிவலிங்கம் @ சிவா அவர்கள நிங்கள் செல்லுவது முற்றிளும் உண்மை. …… மகாதீர் அவர்களின் காலத்தில் மலாய் இனத்திற்காக செய்தது பலகோடி . இந்தியர்களையும் ,சீனர்களையும் ஓரங்கட்டி , அவர்களிடம் உள்ளவற்றை நேரிடையாகவும்,மறைமுகமாகவும் பறித்து, மலாய் இனம் உயர பல வழிகளில் உதவி உள்ளார்.கொடுத்து கொடுத்து கைரேகை அழிந்து, அவர் கை வீங்கிபோனதுடான் மிச்சம்.
இந்த சைட் உசேன், இப்போது எந்த ஏரியாவுல (area) பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறாராம்?