எதிர்வரும் ஆகஸ்ட் 29-30 இல் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே 4 பேரணியில் மக்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்க 2,000 தொண்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஸ் கட்சியின் தன்னார்வலர் பாதுகாப்பு பிரிவினர் அமல் இதில் பங்கேற்கவில்லை.
கடந்த வாரம் பெர்சே தொடங்கிய நிதி திரட்டல் பரப்புரையின் வழி ரிம120,000 திரட்டப்பட்டுள்ளது.
2,000 பேர் பாதுகாப்பு வழங்க திரட்டப்பட்டுள்ளதை பெர்சேயின் தலைவர் மரியா சின் அப்துல்லா உறுதிப்படுத்தினார். இதற்கு இதர அரசியல் கட்சிகளும் உதவின என்றாரவர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற பேரணிகளில் கூட்டத்தினரை கட்டுப்படுத்துவதற்கு பாஸ் கட்சியின் அமல் என்ற தன்னார்வலர் பாதுகாப்பு பிரிவை பெர்சே பெரிதும் நம்பியிருந்தது என்று மரியா மேலும் கூறினார்.
முன்பிருந்ததைப் போலல்லாமல் இம்முறை பாஸ் நேரடியாக இப்பேரணியில் பங்கேற்காது. இன்று இதனை உறுதிப்படுத்திய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கட்சி இரு பிரதிநிதிகளை அனுப்பும் என்றார்.
இப்பேரணியை ஏற்பாடு செய்வதில் பாஸ் கட்சி பங்கேற்கவில்லை என்றாலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் இப்பேரணியில் பங்கேற்பதைத் தடுக்கவில்லை என்பதோடு அவர்கள் அதில் பங்கேற்பதற்கு ஆதரவும் அளிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடயே, சட்டவிரோதமான முறையில் பெர்சே 4 பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது..
இப்பேரணியின் முழு பாதுகாப்பிற்கும் பெர்சேதான் பொறுப்பேற்க வேண்டும் என்று போலீஸ் தெரிவித்துள்ளதாக கூறிய மரியா, பெர்சே ஒரு சிவியன் அமைப்பு. அது கூட்டத்தினரை கட்டுப்படுத்துவது போன்ற சில சாதாரண நடவடிக்கைகளை பெர்சே கவனித்துக் கொள்ளும். ஆனால், கடுமையான பிரச்சனைகள் என்றால், அது போலீசாரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றார்.
பாஸ் கட்சி உறுப்பினர்கள் பேரணியில் கலந்துக்கொள்வதைதடுக்க
தடுக்கவில்லை .பங்கேற்க ஆதருவும் இல்லை.தீர்க்கமான்முடிவுசெய்ய
தடுமாறும் அறிவுமழுங்கிய தலை!.
இந்த 2,000 பாதுகாப்பு தொண்டர்களும் போலீசுடன் இணைந்து பேரணிக்கு பாதுகாப்பு வழங்கினால், தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பதுடன் மக்களின் உரிமைக்கும் ஆதரவு கொடுத்ததாக கருதப்படும்!!, இருப்பினும், வெறுமனே கிளறி விட்டு (பெர்சிஹ் 4) மீது குறை, குற்றம் சுமத்த பாதுகாப்பு என்ற போர்வையில் நயவஞ்சகர்களும் குள்ளநரிகளும் அலைவதை கவனிக்கவும்!!! சிந்திப்போம் செயல் படுவோம்!!!
இந்த முறை நிச்சயமாக இந்த பேரணி வெற்றி பெறாது இதற்கு முன் நடந்த அணைத்து பேரணியையும் நான் நேராக பார்த்து உள்ளேன் அதில் பெரும்பாலும் பாஸ் கட்சி ஆதரவாளர்கள் தான் நிறைந்து இருந்தனர். இந்த முறை பாஸ் கட்சி ஆதரிக்க வில்லை என்றால் கண்டிப்பாக கூட்டம் வராது . பாப்போம் இந்த முறை எதனை சீனர்கள் பங்கெட்கின்றனர் என்று .
பாதுகாப்பு தொண்டர்கள் போர்வையில் குழப்பவாதிகள் உள்ளே வரலாம்.பெர்சே கவனமாக செயல்படுவது நல்லது.அதேபோன்று காவல் துறையும் தன்னுடைய பாதுகாப்பு பொறுப்பில் இருந்து கை கழுவ கூடாது.இது அணைத்து மலேசியர்களின் பாதுகாப்பு உடையது.அமைதியாக பேரணி நடைபெறுவதையே அனைவரின் விருப்பம்.உலக நாடுகளில் அமைதி பேரணிக்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவது இங்கேயும் வரவேர்கப்படுகிறது.
இந்த பேரணி குறிப்பிட்ட கட்சிக்காக அல்ல. அழிந்துக்கொண்டிருக்கும் ஜனநாயகம் மறுபடியும் புத்துயிர் பெற!!!!