முகைதின் யாசின்: ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு காரணம் 1எம்டிபி

 

1mdbmuhyiddinஅம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசின் ரிங்கிட் மதிப்பின் வீழ்ச்சியடைந்தது 1எம்டிபி விவகாரத்தால்தானே தவிர இதர காரணங்களால் அல்ல என்று கூறுகிறார்..

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு அல்லது நமது பொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலை வீழ்ச்சி மட்டும் இதற்கு காரணமல்ல. அதனை உண்டுபண்ணியது அரசியல் பிரச்சனைகள் என்றார் முகைதின்.

“நம் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கான தாக்கத்தை 1எம்டிபி ஏற்படுத்தியுள்ளது.

“முதலீடு செய்வதற்கு மலேசியா ஒரு நல்ல இடம். ஆனால், ரிங்கிட் உறுதியாக இல்லாததால் முதலீட்டாளர்கள் அதை விரும்பவில்லை. அவர்கள் காத்திருப்பதைத் தேர்வு செய்துள்ளனர்”, என்று 2,000 செம்பூர்னா அம்னோ தொகுதி உறுப்பினர்களிடம் முகைதின் இன்று கூறினார்.