அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்சாவும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினர். அவர்கள் என்ன பேசினர் என்பதைத் தெரிவிக்க தெங்கு ரஸாலி மறுத்து விட்டார். அது தனிப்பட்டது என்றார்.
தெங்குவும் மகாதிரும் ஒரு காலக்கட்டத்தில் பரமவிரோதிகாளாக இருந்தனர். அவர்களுக்கிடையிலான சச்சரவு 1987 இல் அம்னோவின் பதிவு ரத்து செய்யப்படுவதில் முடிந்தது.
என்னதான் பேசினார் என்பதை வலியுறுத்திக் கேட்ட போது, “அது தனிப்பட்டது, மகாதீரை கேளுங்கள்” என்றாரவர்.
அவர்களுக்கிடையிலான சந்திப்பு பல கேள்விகளை எழுப்பின. ஆனால், தெங்கு அதற்கு முக்கியத்துவம் எதுவும் அளிக்கவில்லை. தாம் பிரதமர் நஜிப்பை கூட அவரது அழைப்பின் பேரில் இரு முறை சந்தித்ததாகவும் கூறினார். ஆனால், பேசியது என்ன என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்.
“நான் அவருக்கு ஆலோசனை கூறினேன். அதனை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன், ஏனென்றால் அதுவும் ஒரு தனிப்பட்ட உரையாடல்தான்”, என்று புக்கிட் ஜாலிலில் இன்று நடைபெற்ற ஒரு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெங்கு கூறினார்.
ஆசிரியரே! என்ன இது தலைப்பை தெரிந்தே போட்டீர்களா? மகா + திருடனான = மகாதிருடனான. திருத்தி மகாதீருடனான என்று போடுங்கள். அல்லது அது திருடர்கள் கூட்டம் என்று கருதுவீர்களானால் அப்படியே விட்டு விடுங்கள்.
கத்திரிக்காய் முத்தினால் கடைத் தெருவுக்கு வரும் என்பார்கள். அது இன்றே முத்தி ஜாஹீட் வாயிலாக வந்து விட்டது. முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு? நேரிடையாகவே சொல்லாமே.