சரவாக் ரிபோர்ட் கட்டுரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது குறித்து கேள்வி எழுப்புகிறார் நஜிப்

 

najibquestionssr1எம்டிபி குறித்து பல குற்றச்சாட்டுகளை இதுவரையில் வெளியிட்டு வந்துள்ளது யுகேயை தளமாகக் கொண்டுள்ள சரவாக் ரிப்போர்ட். அதில் கூறப்பட்டுள்ளவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று பிரதமர் நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமரின் இக்கேள்வி, நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்ட அமெரிக்க$681மில்லியனில் அமெரிக்க$650மில்லியன் வெளியூருக்கு மீண்டும்  மாற்றப்பட்டது என்று சரவாக் ரிபோர்ட் தெரிவித்திருந்ததற்கு அடுத்த நாள் எழுப்பப்படுகிறது.

ஆனால், நஜிப் இந்த மிக அண்மைய குற்றச்சாட்டுக்கு திட்டவட்டமான பதில் அளிக்கவில்லை. மாறாக சீழ்க்கையொலி எழுப்பியவரின் 1எம்டிபி பற்றிய கடந்தகால அறிக்கைகளின் நம்பகத்தன்மை மீது கவனம் செலுத்தினார்.

“அந்த மின்னஞ்சல்கள் உண்மையானவையா? அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டனவா?”, என்று நஜிப் அம்னோ கெபாலா பாதாஸ் பேராளர்கள் கூட்டத்தில் இன்று பேசியபோது கேட்டார்.

1எம்டிபி ரிம42மில்லியன் இழப்பை அடைந்துள்ளது என்ற கூற்று கூட உண்மையானால், அது எப்படி சொத்துகளை வாங்க முடிந்தது என்று அவர் வினவினார்.

சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம் என்று நஜிப் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். குற்றவாளி என்று நிருபிக்கப்படும் வரையில் ஒருவர் நிரபராதி என்ற சட்ட வரம்பயையே அவை மாற்றி விட்டன என்றாரவர்.