நஜிப்: அடுத்த ஆண்டில் பிஎன் எம்பிகளுக்கு கூடுதல் பணம்!

 

najibmoremoneyபிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்ராஜெயாவின் ஆண்டு நிதி ஒதுக்கீடு தற்போதைய ரிம5மில்லியனிலிருந்து அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.

கெரிக் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தில் பேசிய நஜிப் அது பற்றிய கூடுதல் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

“முன்பு அது ரிம1 மில்லியனாக இருந்தது. இப்போது அது ரிம5 மில்லியன். ஆனால் அடுத்த ஆண்டில் அதிகம் கொடுக்கப்படும். நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி நான் அறிவிப்பேன்”, என்று நஜிப் தெரிவித்ததாக் பெர்னாமா கூறுகிறது.

தற்போது, பிஎன்னுக்கு 134 எம்பிக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குகாக ஆண்டுதோறும் செய்யப்படும் நிதி ஒதுக்கீடான ரிம670 மில்லியன் பொதுமக்களின் வரியிலிருந்து கொடுக்கப்படுகிறது.

அந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து மருத்துவமனைகள், நீர் வடிகால் திட்டம் மற்றும் பள்ளிகள் போன்ற சில சிறிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது போன்ற நிதி ஒதுக்கீடு இல்லை.

அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்களோ என்ற கேள்வி எழுகிறது.