இணையத்தில் “பொய்யான தகவல்களும் வதந்திகளும்” இடம்பெறுவதாகக் கூறிய தகவல், பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், சமூக வலைத்தள நடத்துனர்களின் உதவியுடன் அவற்றுக்கு முடிவுகட்டப்படும் என்றார்.
“ஊடகங்களில், குறிப்பாக இணையச் செய்தித் தளங்களில் பொய்யான தகவல்கள் முக்கிய இடம்பெற்று வருகின்றன.
“இதன் தொடர்பில், முகநூல், கூகுல், டிவிட்டர் ஆகியவற்றைச் சந்தித்து சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் மற்றும் வதந்திகளின் பரவல் பெருகிவருவதைத் தடுக்க அவற்றின் ஒத்துழைப்பைப் பெறுமாறு மலேசிய பல்லூடக ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறேன்”, என்றாரவர்.
மூன்று வலைத்தள நடத்துனர்களுமே அதிகாரிகளுடன் ஒத்துழைத்தே வருகிறார்கள். ஆனாலும், ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சொன்னார்.
நீங்கள் கூறும் அந்த “பொய்யான தகவல்களும் வதந்திகளும்” பின்னர் உங்களால் அது யாவும் “உண்மையான தகவல்தான் வதந்தியல்ல” என ஒத்து கொள்வீர்கள், உதாரணம் 2.6 பில்லியன் பண விவகாரத்தை போல…..
எது மெய், எது பொய் என்று இன்றுள்ள அறிவார்ந்த மக்களுக்குத் தெரியும். அதிக பிரசங்கித்தனமாக மக்களுக்கு அறிவு புகட்ட முற்படும் அரசாங்கம் முதலில் அறிவாளித்தனமாக நாட்டை நிருவகிக்க கற்றுக் கொள்ளுங்கள். இப்படி ஊதாரித் தனமாக RM48/= பில்லியன் கடனை மக்கள் தலையில் சுமத்தி விட்டு மக்களுக்கே அறிவு புகட்ட கிளம்பிய இந்த மந்திரியார் ஒரு தலையாட்டி பொம்மை என்பது வெள்ளிடை மலை. இப்படி பட்டவர்கள்தான் நம்பிக்கை நாயகனை சுற்றி இருப்பவர்கள்.
பிரதமர் மீது குற்றம் சாட்டப் படுவதற்கான நகல் குற்றப் பத்திரிகை வெளியானதும் அதை மறுத்த கூஜா தூக்கி மந்திரிகள், இப்பொழுது அவ்வாறு ஒரு குற்றப் பத்திரிகை இருந்ததை மறைமுகமாக ஒப்புக் கொள்வதில் இருந்து தெரியவில்லையா எது உண்மை, எது பொய்யென்று.
அட அரை வேக்காட்டு அமைச்சரே! காலம் காலமாக ‘உத்துசான் மலேசியா’ வில் வெளியாகும் பொய் மூட்டைகளை நிறுத்தவே,உம்மால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானான அரசியல் தலைவர்களுக்கு உண்மை என்றுமே கசக்கும்!!! ஒரு குழியை மூட பத்து குழிகள் தோண்டும் அரசியல் தலைவர்கள் நிறைந்த நாடு இது!!! தற்போதைய முதலீடு விவகாரத்தில், ஒரு பொய்யை மறக்க ஆயிரம் பொய்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்!! பொய்யான தகவல்களுக்கு விடிவு காலம் மக்களிடமே உள்ளது!! பொறுத்திருங்கள்!!! சிந்திப்போம் செயல் படுவோம்!!