ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் பிரச்னை ஏதுமில்லை என்று கருத்துரைத்த அம்னோ உச்சமன்ற உறுப்பினரை ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் இப்ராகிம் கண்டித்துள்ளார்.
நிலவரம் அறியாமல் புவாட் ஸர்காஷி அறிக்கைகள் விடுக்கக் கூடாது என துங்கு இஸ்மாயில் கூறினார்.
“சுல்தானுக்கும் நஜிப்புக்கும் பிரச்னை உண்டா இல்லையா என்று ஊகம் செய்வதெல்லாம் கூடாது. உண்மை என்பது சுல்தானுக்கும் எனக்கும்தான் தெரியும்.
“இப்போதைக்கு அதை வெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை”. ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் முகநூல் பக்கத்தில் பட்டத்திளவரசர் இவ்வாறு கூறினார்.
2.6 பில்லியன் தொகையிலிருந்து நஜிப், தமக்கு ஏதாவது கொஞ்சம் தூக்கி போடுவார் என்ற எண்ணத்தில் ஷர்காசி பிரதமருக்கு அரண்மனையுடன் நல்ல தொடர்பு இருப்பதாக பொய் சொல்லி இப்போது மூக்கறுந்து கிடக்கிறார்!!! அவரது முகத்தை இன்னும் கண்ணாடியில் பார்க்கவில்லை போலும்!!!! உண்மை நிலவரத்தை வெளிப்படையாக அறிவித்த இளவரசர் வாழ்க!! மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!!!1