நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் வழி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்ப்பது சட்டவிரோதமான செயலல்ல என்கிறார் பிகேஆர் எம்பி ஒருவர்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு என்பது அரசமைப்புப்படியானது, மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பது என அலோர் ஸ்டார் எம்பி கூய் ஹிஸ்யாவ் லியோங் கூறினார்.
தேர்தல்கள் மூலமாக மட்டுமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்று துணைப்பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்கும் கூறிவருவதற்கு எதிர்வினையாக கூய் இவ்வாறு கூறினார்.
அலோர் ஸ்டார் MPஅவர்களே! நீங்கள் சொல்வது சரி. நமது அமைச்சரவையில் பைத்தியக்காரர்கள் குவிந்தவிட்டனர் என வாய் கிழியக் கத்துகிறேன். யாரும் கேட்கமாட்டேன் என்கிறார்கள்.