சிலாங்கூரிடம் ‘யாரோ ஒருவருக்குக் கிடைத்த நன்கொடையை’விட ரிம1 பில்லியன் கூடுதலாகவே இருக்கிறது

fundசிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி, இன்று  காலை  மாநிலக்  கையிருப்புப்  பற்றிப்  பேசியபோது  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கையும்  இலேசாகக்  கிண்டலடித்தார்.

பிரதமர் பெயரைக்  குறிப்பிடாமலேயே, “2015 ஆகஸ்ட்  13  முடிய.  நம்  மாநிலத்  தொகுநிதியில் ரிம3.73 பில்லியன்  உள்ளது. இது  யாரோ  ஒருவருக்குக்  கிடைத்த  நன்கொடையைவிட  ரிம1 பில்லியன்  அதிகமாகும்”, என்றார்.

நஜிப்பின்  சொந்தக்  கணக்கில்  வரவு  வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன்  பற்றித்தான்  அவர்  குறிப்பிடுகிறார்  என்பது  வெள்ளிடை  மலை. அப்பணம்  மத்திய  கிழக்கிலிருந்து  வந்த  நன்கொடை  என்று  கூறப்பட்டிருக்கிறது.

அஸ்மின், சிலாங்கூர்  சட்டமன்றத்தில் இங்  ஸ்வீ  லிம் (டிஏபி- செகிஞ்சான்)  முன்வைத்த  கேள்வி ஒன்றுக்குப்  பதிலளிக்கையில்  அவ்வாறு  கூறினார்.