அரசாங்கத்தைக் கவிழ்க்கும் இயக்கமொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாக் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியிருப்பதன் தொடர்பில் போலீசார் மூன்று புகார்களைப் பெற்றுள்ளனர்.
அப்புகார்கள்மீது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குக் கேடு செய்யும் நடவடிக்கைகள் தொடர்பான குற்றவியல் சட்டம் பகுதி 124பி-இன்கீழ் விசாரணை நடத்தப்படும் எனப் போலீஸ் படைத்தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
“அரசமைப்புக்கு விரோதமான வழிகளில் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிகள் நடப்பது தெரிய வந்தால் நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்”, என்றாரவர்.
அம்னோ தலைவர் ஒருவர் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிடுவதாக ஜாஹிட் கூறியிருப்பதில் உண்மை உண்டா என்று வினவியதற்கு போலீஸ் தலைவர் விடையளிக்க மறுத்தார்.
“அதை அம்னோ தலைமையிடம்தான் கேட்க வேண்டும். கட்சி விவகாரங்களில் போலீஸ் தலையிடுவதில்லை. அதனால் கட்சி விவகாரங்கள் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்”, என்றார்.
IGP அவர்களே! ஒரு தமிழ்ப்பாடல், ‘பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு’. நம் நாடு மட்டுமல்ல, வேறு எந்த நாடும் சரி,தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்க்கும் சக்தியும், பலமும் அந்நாட்டு ராணுவத்திடம் மட்டுமே உண்டு. பாகன் டத்தோ சொல்லிவிட்டதாம், IGP ஆராயப் போகிறதாம். நல்ல கூத்து. இரண்டு பைத்தியங்கள் ஒன்றாக சேர்ந்துள்ளன. மொகலாய அரசன் முகம்மது பின் துக்ளக் தோற்றான் போங்கள். இந்த பாகன் டத்தோ பிரதமராவதைப் பற்றி உங்கள் கருத்தென்ன என ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். என்னுடைய பதில், “பைத்தியம் பிடித்த குரங்கு, கள்ள சம்சுவை குடித்து நடக்கும்போது, அந்த குரங்கை ஒரு தேள் கொட்டிவிட்டது. அதன் கையில் ஒரு துப்பாக்கியும் கொடுத்தால் என்ன நடக்கும்?”.
விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் ஓன்று சேர்ந்திருக்கிறார்கள் .
அட்டகாசத்தை பொறுத்திருந்து பார்ப்போம் !!!
திரு. சிங்கம் அவர்களே தங்களின் உவமை பாராட்டுக்குரியது. பாவம் அந்த குரங்குதான் பரிதாபத்துக்குரியது.
இவனுங்க ரெண்டு பெரும் நல்ல காமெடியன் . வேடிக்கை பார்க்கலாமே.