துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ‘வயோதிகர்’ ஒருவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் கூறினார்.
நேற்று லூமுட் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் இதைத் தெரிவித்த ஜாஹிட் அந்த மூத்த சதிகாரரின் பெயரை வெளியிடவில்லை.
“பெரிய இலட்சியத்தைக் கொண்டவர். இப்போது ‘பின்வாசல் வழியாக’ நுழையப் பார்க்கிறார்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. அவர் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அல்லர் என்றும் ஜாஹிட் கூறினார்.
இதற்குமுன்பு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரின் பழைய எதிரி தெங்கு ரசாலி ஹம்சாவைச் சந்தித்து நஜிப்பை வீழ்த்துவது பற்றி விவாதித்ததாகக் கூறப்பட்டிருந்தது.
அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா. கவிழ்க்க சதித்திட்டம் போடுவோர் இளையவராயினும், அல்லது முதியவராயினும், ஒன்றும் புதிதல்ல. ஆனால், ஒரு பைத்தியக்காரரை துணைப்பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்த மலேசியர்களை நினைத்தால் தான் சிரிப்பாய் வருகிறது. நல்ல ஒரு வளமுள்ள நாட்டை குரங்குகளின் கையிலே கொடுத்து, பிச்சி பிச்சி ‘பீநாறி’ ஆக்கிவிட்டோம்.
வெறுமனே இல்லாத ஒன்றினை கிளப்பிவிட்டு, தம் நிலையை இன்னும் உறுதியாக பிடித்துக்கொள்ள நற்பெயர் வாங்கும் சூழ்ச்சியாகவும் இருக்கலாம் அல்லவா??? பாவம்!! உண்மையென புலப்படுத்த, பலியாவது எந்த அம்னோ கிழட்டுக் கடா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!!
நாடு அறிந்த பாப்பானுக்கு பூணூல் எதற்கு ? ஜாஹிட் சொல்ல
தில் இல்லை .பெரியவர் மகனை உயர்த்த வேலை செய்கிறார் .
அவ்வளுவுதான் !
புது விலக்குமாரல்லவா! ஆரம்பத்தில் நன்றாக குப்பையைக் கூட்டும்!!!
எல்லாமே பொய்யும் பித்தலாட்டமும் தான் — ஆட்சியை உடும்பு பிடியாக பிடித்து வைத்துகொள்ளவே
உங்கள் இருவரையும் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க செய்தால் பொருத்தமாக இருக்கும்.
புதிய DPM இன் தினசரி sandiwara ரொம்ப சிறப்பாக இருக்கு . பதவிக்கு வந்த பிறகு நாட்டு நலந்தான் முக்கியம். தனி நபர் துதி பாடல் இல்லை .