அரசியல் நன்கொடைச் சட்டத்தைக் கேலி செய்கிறார் சைபுடின்

saifஅம்னோ  உறுப்பினர்  சைபுடின்  அப்துல்லா, பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அரசியல்  நிதி  மீதான  குழு  அமைக்கும்  திட்டத்தை  மறைமுகமாகக்  கேலி  செய்துள்ளார்.

“காட்டை  மொத்தமாக  அழித்து  ஏப்பம்  விட்டாயிற்று. இப்போது சுற்றுச்சூழல்  பற்றியும்  மரம்  நடுவது  பற்றியும் விவாதிக்க ஒரு  குழு  அமைக்க  முன்மொழியப்பட்டுள்ளது”, என  சைபுடின்  இன்று  முகநூலில்  பதிவிட்டிருந்தார்.

நஜிப், அண்மையில்  அடுத்த  பொதுத்  தேர்தலுக்கு  அரசியல்  நன்கொடைகளை  முறைப்படுத்த ஒரு  குழு  அமைக்கப்படும்  என  அறிவித்திருந்தார்.

அவர்  2013  பொதுத்  தேர்தலுக்காக  ரிம2.6  பில்லியன்  நன்கொடை  பெற்றதாகக்  கூறப்படுவது தொடர்பில்  பொதுமக்கள்  கடும்  எதிர்ப்பை  வெளிப்படுத்தியதை  அடுத்து  அக்குழு  அமைப்பது  பற்றி  அறிவிக்கப்பட்டது.