ஐஜிபி: பெர்சே புக்கிட் ஜாலில் அரங்கத்தைப் பயன்படுத்துவதே நல்லது

rallyதேர்தல்  சீரமைப்புக்குப்  போராடும்  அமைப்பான  பெர்சே,  பெர்சே 4   பேரணியை  புக்கிட்  ஜாலிலில்  உள்ள   தேசிய  ஸ்டேடியத்தில்  நடத்துவதே  நல்லது  என்கிறார்  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்.

100,000 பேர்  ஒன்றுகூடுவதற்கு  புக்கிட்  ஜாலில்  அரங்கமே  சரியான  இடம்  என  காலிட்  கூறினார்.

பேரணியை  டட்டாரான்  மெர்டேகாவிலும்  பாடாங்  மெர்போக்கிலும்  நடத்துவது  பொருத்தமாக  இராது. அவை  மெர்டேகா  கொண்டாட்டங்களுக்காக  பயன்படுத்திக்  கொள்ளப்படும்.

“ஒவ்வோராண்டும்  அங்குதான்  மெர்டேகாவைக்  கொண்டாடுகிறோம். எதற்காக  ஆகஸ்ட்  29, 30-இல்  அதை (பேரணி)  அங்கே  நடத்துவதெனப்  பிடிவாதம்  பிடிக்கிறார்கள்? மலேசியாவில் வேறு  இடமே  இல்லாதது  மாதிரி  அல்லவா  இருக்கிறது.

“100,000 பேர்  வருவார்கள்  என்று  சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால்  ஸ்டேடியம்தான்  பொருத்தமான  இடம். 100,000பேரை  டட்டாரான்  மெர்டேகாவில்  திணிக்க  முடியுமா,  என்ன?”, என்று  காலிட்  வினவினார்.