அரசாங்கத்தையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் கவிழ்க்க அம்னோ தலைவர் ஒருவர் சதி செய்கிறார் என்று கூறப்படுவதை முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ் நம்பவில்லை.
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அவ்வாறு கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.
“சதித் திட்டங்கள் (தலைமையை) முடிவு செய்வதில்லை. வாக்காளர்களாகிய மக்கள்தாம் வரும் பொதுத் தேர்தலில் அதை முடிவு செய்வார்கள்.
“அதனால் மக்களை முன்னிலைப்படுத்தி, சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்யுங்கள்”, என ரபிடா முகநூலில் கூறியிருந்தார்.
வாக்காளர்களாகிய மக்கள் பொதுத் தேர்தலில் முடிவு செய்வது கூட அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி தான். பங்களா, பாகிஸ்தான்காரனுக்கு எல்லாம் நீல அடையாளக்கார்டுகள் கொடுத்து, பணத்தைக் கொடுத்து, வியாபாரம் செய்ய லைசன்சு கொடுத்து இப்படி எல்லாம் கொடுத்த பின்னரும் கவிழ்க்கும் சதி என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இல்லாத ஒன்றை கிளப்பிவிட்டு நல்ல பெயர் வாங்க எதை வேண்டுமானாலும் சொல்லலாம்!!! பாவம் இந்த கூற்று உண்மையென வெளிப்படுத்த எந்த அம்னோ கிழட்டுக் கறுப்புக் கடா பலியாகப் போகிறதோ!!!
2.6 பில்லியன் “ஊழல் நன்கொடை”யில், UMNO தலைவர் ஒருவர் மட்டும்தான் தனது பங்குக்காக சதி செய்கிறார் என்பதை நம்ப முடிய வில்லை. UMNO தலைவர்கள் அனைவரும் தங்களது பங்கு கிடைக்கும்வரை “அரசாங்கத்தை கவிழ்க்க சதி” என்ற மறைமுக மிரட்டல் விடுத்து கொண்டே இருப்பார்கள் என்பதுதான் உண்மை.
அட நீங்க நம்பரிங்களோ இல்லையோ நாங்க நம்புகின்றோம் காரணம் இத்தகைய அரசு இருப்பதை விட வீழ்வதே மேல்.
வணக்கங்க ரபீடா அக்கா! தைரியமா உண்மையை போட்டு உடைக்கிறீங்க. மந்திரியா இருக்கிறப்ப ஒண்ணுமே சேர்த்ததில்லையோ?