மகாதிர்: பிரதமர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் பயனற்றது

 

noconfidencefutileநாடாளுமன்ற மக்களவையில் எடுக்கப்படும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வழி பிரதமர் நஜிப் பதவியிலிருந்து அகற்றப்பட மாட்டார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

இது மிகக் கடினமானது ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து அம்னோ உறுப்பினர்களும் அவருக்குக் கடமைப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லை என்று அவரது அகப்பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

தங்களுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இருக்கிறது என்று அறிவிப்பதற்காக ஓர் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் பாரிசான் மற்றும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடயே சத்தியப்பிரமான பிரகடனங்களைத் தயார் செய்து வருவதாக துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறிக்கொண்டதற்கிடையில் மகாதிரின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

இச்சதியில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறவர்களில் ஒருவர் வருத்தம் தெரிவித்ததாக ஹமிடி கூறிக்கொண்ட போதிலும், 20 பின் எம்பிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற பேச்சு இன்றும் தொடர்கிறது.

இதுவரையில் 4 எம்பிகள் – ஹஸ்புல்லா ஒஸ்மான் (கெரிக்), நோராய்னி அஹ்மட் (பாரிட் சுலோங்), ரஹிம் பாக்ரி (கூடாட்) மற்றும் பங்க் மொக்தார் ராடின் (கின்னாபாத்தாஙான்) -தாங்கள் இச்சதியில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

1எம்டிபி குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை சீரழிக்க நஜிப் எடுத்துக் கொண்ட முயற்சிகளை மகாதிரின் அகப்பக்கம் பட்டியலிட்டுள்ளது.

அவரது இது போன்ற நடவடிக்கைகளால் பிரதமரை வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

“பிரதமர் பதவியிலிருந்து நஜிப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்து வலுவாக இருந்து வருகிறது”, என்று மகாதிர் எழுதியுள்ளார்.