மகாதிர் பிரதமராக இருந்தால் ஊழல் தடுப்பாளர்கள் அவர் அருகில்கூட செல்ல முடியாது

graftடாக்டர்  மகாதிர்  முகம்மட்,  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)த்தின்   விசாரணையைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கெடுக்கப்  பார்க்கிறார்  எனக்  குற்றஞ்  சாட்டுகிறார்.  ஆனால், அந்த  முன்னாள்  பிரதமர்  மட்டும்  இப்போது  பதவியில்  இருந்தால் ஊழல்தடுப்பு  ஆணையம்  அவர்மீது  விசாரணையையே  தொடங்கி  இருக்காது.

நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன்  ரிங்கிட் போடப்பட்டதன்மீது  விசாரணை  நடைபெறுகிறது  என்றால் அது  பிரதமர் “சட்டத்துக்கு  மதிப்பளித்து”  நடந்து  கொள்கிறார்  என்றுதான்  பொருள்படும்  என  நஜிப்- ஆதரவு  இணையத்  தளமான  MyKMU.net  கூறியது.

நஜிப் “அரசாங்கத்தைக் களவாடினார்”  என்றும்  அவர்மீதான  விசாரணைகளைத்  தடுத்தார்  என்றும் மகாதிர் தம்  வலைப்பதிவில்  குற்றம்  சாட்டியிருப்பதற்குப்  பதிலடி  கொடுப்பதுபோல்  அமைந்துள்ளது  அப்பதிவு.

“பேங்க்  நெகாரா,  போலீஸ், எம்ஏசிசி  எல்லாம்  பிரதமரை  விசாரிக்க  அரசாங்கம்  அனுமதிப்பது துன்னுக்கு (மகாதிர்)  வியப்பை  அளிக்கலாம். துன்  காலத்தில்  இது நடந்திருக்கவே  முடியாது”, என்று  அது  கூறிற்று.