மற்ற நாடுகளைவிட சிறப்பாக செயல்பட்டுவரும் மலேசியா, நிச்சயமாக ஒரு தோல்வி கண்ட நாடு அல்ல என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
“இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தத் ‘தோல்வி கண்ட’ நாடுதான் 2014-2015 இஸ்லாமியப் பொருளாதாரக் குறியீட்டில் (GIEI) முதலிடத்தில் இருக்கிறது”, என்றாரவர்.
இன்று காஜாங்கில் அனைத்துலக வசத்தியா (மிதவாத) கருத்தரங்கில் உரையாற்றிய நஜிப், 70 இஸ்லாமிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று மலேசியாவையே இஸ்லாமியப் பொருளாதாரத்திலும் ஹலால் தொழில்துறையிலும் மிகவும் முதிர்ச்சிபெற்ற நாடு என்று குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.
மலேசியா நிச்சயமாக ஒரு தோல்வி கண்ட நாடு அல்ல ஆனால் தோல்வியை நோக்கிப் போய் கொண்டிருக்கும் நாடு.
கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையாம். அதிகம் போவானேன். அண்டை நாடான சிங்கப்பூருடன் ஒப்பிடும் அருகதை கூட நமக்கு கிடையாது. இத்தனைக்குக்கும் நம் நாட்டிலிருந்து பிரிந்துபோன, எவ்வளமும் இல்லாத ஒரு நாடு. அதன் கால் தூசிக்கு கூட வராத நாடாக, நம் நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டு, வீராப்பு பேசுகின்றனர் இந்த உதவாக்கரை பணந் திண்ணிகள்.
“உலகளாவிய மனித உரிமைகள்” நமக்கு உரியது அன்று என்று இன்று நீர் சொல்கின்றீரே அதுதான் இந்நாடு தோல்வியை நோக்கிப் போய் கொண்டிருப்பதற்கு அடையாளம். நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக பாஸ் கட்சியின் ஓட்டைப் பெற மலேசியா இஸ்லாத்தின் அடிப்படியிலான மனித உரிமைகளைப் பின் பற்றும் என்று சொல்கின்றீரே அதுதான் இந்நாடு தோல்வியை நோக்கிப் போய் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். “உலகளாவிய மனித உரிமைகள்” இவ்வுலகில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டதை நீர் மறுக்கின்றீரே அதுதான் இந்நாடு தோல்வியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். உலக மக்கள் அனைவரும் உலகத்தைச் சார்ந்து வலப்புறமாக சுற்றி வர நான் அதற்கு எதிராக சுற்றி வருவேன் என்று கூருகிண்றீரே அதுதான் இந்நாடு தோல்வியை நோக்கிச் செல்கின்றது என்பதற்கு அடையலாம். உலக மக்களில் வெவ்வேறு நாட்டவருக்கு வெவ்வேறு “மனித உரிமைகள்” என்று வாதிடுகிண்றீரே அதுதான் சர்வாதிகாரத்திற்கு இந்நாட்டை இட்டுச் செல்வதின் அடையாளம். அதுவே ஒரு நாட்டின் தோல்விக்கு உச்சக் கட்டம். இதையும் அறியாத ஒரு சடம் நமக்குத் தலைவர். உருப்பட்ட மாதிரிதான் இந்நாடு.
பிறர் எழுதிக் கொடுத்த சொற்பொழிவு கட்டுரையை சிறிதும் சிந்தித்துப் பார்த்து திருத்தி வாசிக்காமல் போவதும் தோல்விக்கு அடையாளமே.
உண்மையும் உரிமையும் மறக்கப்படும், மறுக்கப்படும் எந்த ஒரு நாடானாலும், அந்நாடு பின்னடைவு கொண்ட நாடாகவே பொருள் கொள்ளப்படும்!! பாமர மக்களின் பொருளாதார நிலை வலுவடைகிறதோ இல்லையோ, ஆட்சி பீடத்தில் உள்ளோரின் பொருளாதாரம் நன்றாகவே வலுவடைகிறது!!!!
நண்பர் ‘தேனீ’ யின் கருத்துக்கள், சிந்தனைக்குரியவை.
தோல்வியின் அடையாளமே உங்களின் பேச்சு.நாணய வீழ்ச்சி அதற்கு சான்று.