டட்டாரான் மேர்டேகாவில் பேரணி நடத்துவது முடியாத செயல் என்று கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக (டிபிகேஎல்) மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசீஸ் கூறினார்.
மெர்டேகா தினக் கொண்டாட்டத்துக்கான ஒத்திகைகளுக்கும் மற்ற ஏற்பாடுகளுக்கும் டட்டாரான் மெர்டேகா பயன்படுத்திக் கொள்ளப்படும் என்பதே இதற்குக் காரணம் என்றும் அமின் நோர்டின் கூறினார்.
அதன் அருகில் உள்ள பாடாங் மெர்போக்கையும் பேரணிக்குப் பயன்படுத்திக் கொள்ள இயலாது என்று தெரிவித்த அமின் அதை ஆயுதப்படையினர் அவர்களின் வாகனங்களை நிறுத்திவைக்கப் பயன்ப்டுத்திக் கொள்வார்கள் என்றார்.
ஆனால், பேரணியைப் பொருத்தவரை அதைத் தாம் ஆட்சேபிக்கவில்லை என்றார்.
இன்று காலை, டிபிகேஎல், போலீஸ், பெர்சே இயக்கக்குழுப் பேராளர்கள் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் இவ்வாறு கூறினார்.
“தெருக்களில் இறங்க விரும்பினால், அவர்கள் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும்- அதாவது சாலையோரத்தில் இருக்க வேண்டும், பொதுமக்களுக்குத் தொந்திரவு கொடுக்கக்கூடாது சாலைகளில் உள்ள தளவாடங்களைச் சேதப்படுத்தக் கூடாது.
“அவர்கள் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் மட்டுமே டிபிகேஎல்லும் போலீசும் நடவடிக்கை எடுக்கும்…..பொதுமக்களின் அல்லது அரசாங்கச் சொத்துகளைச் சேதப்படுத்தாமல் இருந்தால் சரிதான்”, என்றாரவர்.
அப்ப இவன் வீட்டு முன் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் .