டிபிகேஎல்லிடம் ‘பணிந்து போகவில்லை’:பெர்சே வலியுறுத்து

mariaபெர்சே  கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழகத்துக்கு  விட்டுக்கொடுத்து  ‘அடிபணிந்து  போவதாக’க்  கூறப்படுவதை  அக்கூட்டமைப்பின்  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  மறுத்துள்ளார்.

ஆகஸ்ட்  29-30 இல்  பேரணி  நடத்த  வேண்டாம்  என்றும்  பேரணியை  வேறு  இடங்களில்  நடத்துமாறும்  டிபிகேஎல்  கேட்டுக்கொண்டிருப்பதை  மரியா  சுட்டிக்காட்டினார்.

ஆனாலும், பெர்சே 4  பேரணி  டட்டாரான்  வட்டாரத்தில்தான்  நடத்தப்படும்  என்றாரவர்.

“பணிந்து  போகிறோம், போகவில்லை  என்ற  விவகாரத்துக்கு  இடமில்லை. அதே  வேளை  எதிர்ப்பைக்  காட்டுகிறோம்  என்றும்  பொருள்  படாது. . ஒன்றுகூடுவதற்கு  நமக்குள்ள  உரிமையை  நிலைநாட்டிக்கொள்ள  விரும்புகிறோம், நியாயமான  முறையில்”, என டிபிகேஎல்  தலைமையகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

இரவுமுழுக்க  நடைபெறும் பெர்சே 4  பேரணி  பற்றி  கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழக (டிபிகேஎல்) மேயர்  முகம்மட்  அமின்  நோர்டின்  அப்துல்  அசீசுடன்  விவாதிப்பதற்காக  மரியா  இன்று  டிபிகேஎல்  தலைமையகம்  சென்றார்.