பெர்சே: போலீஸ் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படக்கூடாது

Bersihtoigp1

அரசாங்கத்தைக் கவிழ்க்க மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று பெர்சேவுக்கு போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து போலீசார் ஆகஸ்ட் 29 இல் நடைபெறவிருக்கும் பெர்சே 4 பேரணிக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் அது போலீசாரே நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகும் என்று அந்த அரசு சார்பற்ற அமைப்பு எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளது.

இது ஓர் அமைதியான பேரணி. அமைதியான பேரணி நடத்துவதற்கான உரிமைக்கு அரசமைப்புச் Bersihtoigp2சட்டம் பிரிவு 10(1)(b) உத்தரவாதமளிக்கிறது.

நமது அரசியல் அமைவுமுறையைத் தற்காக்கும் கடப்பாடு போலீசாருக்கு உண்டு என்பதால், போலீசார் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது ஓர் அரசமைப்பு நெருக்கடிக்குக் காரணமாகிவிடும்.

“ஆகவே, போலீசாரின் நடுநிலைமை மற்றும் தொழிலியம் ஆகியவற்றின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் எந்த ஓர் அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு அரசமைப்புச் சட்டத்தையும் இதர சட்டத்தையும் கவனமாகப் படிக்குமாறு பெர்சே 2.0 போலீஸ் படைத் தலைவர் (காலிட் அபு பாக்கர்) மனமாரக் கேட்டுக்கொள்கிறது”, என்று பெர்சே இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.