நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஸ் ஆதரிக்கும்

supportநாடாளுமன்றத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு  நடைபெறுமானால்  பாஸ்  அதற்கு  ஆதரவாக  வாக்களிக்கும்.

“பிரதமருக்கு  எதிராக  நம்பிக்கையில்லா  தீர்மானம்  கொண்டுவரப்பட்டால்  பாஸ்  அதை  ஆதரிக்கும். ஏனென்றால், 1எம்டிபி-க்கு  எதிராக  இதுவரை  எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளும்  ரிம2.6 பில்லியன்  ‘நன்கொடை’ தொடர்பில்  முன்வைக்கப்பட்ட  விளக்கமும்  மக்களுக்குத்  திருப்தி  அளிக்கவில்லை”, என பாஸ்  துணைத்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான் இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

துவான்  இப்ராகிம்  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்புக்கு  ஆதரவு  தெரிவித்தாலும், பாஸ்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  அனைவரும்  அதற்கு  ஆதரவாக  வாக்களிப்பார்களா  என்பது  சந்தேகம்தான். கட்சித்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், அண்மைக்காலமாக  நஜிப்புக்கு  “ஆதரவாக”  பேசி  வருவதுதான்  அப்படி  சந்தேகம்  கொள்ள  வைக்கிறது.