பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்கும் சதித் திட்டம் ஒன்று இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து சிறை அதிகாரிகள் அன்வார் இப்ராகிமுக்கு அதிகமதிகமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்களாம்.
இதனைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த நூருல் இஸ்ஸா அன்வார், தம் தந்தையார் நீதிமன்றங்களுக்கு வரும்போது லிம் கிட் சியாங், ரபிஸி ரம்லி, சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி போன்றோர் அவரை அணுகவோ சந்திக்கவோ சிறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்றார்.
“வழக்குரைஞர்களுடனான சந்திப்புகளும் குறைக்கப்பட்டு விட்டன”, என்று தெரிவித்த அவர், நூலகம் செல்ல அன்வாருக்கு வழங்கப்பட்ட நேரமும்கூட குறைக்கப்பட்டு விட்டதாகக் கூறினார். இதனால் பெரும்பாலான நேரத்தை அவர் சிறையில் உள்ள அறையிலேயே செலவிடுகிறாராம்.
குடும்பத்தினருக்கு அனுமதிக்கப்பட்ட சந்திப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார். முன்புபோல் அன்வார் ஊடகங்களுக்கு அறிக்கை விட முடியாது. அதுவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னொரு தடவை கண் கருப்பாகட்டும். அப்பத்தான் இந்த நாட்டில் அராசங்கம் மாற்றப் படும்.
இன்னும் அம்னோ குள்ளநரி குட்டம் பயம் பயம்
அன்வார் வெளியில் வந்து விட்டாள் உம்னோ காரன்களுக்குஆப்பு ???சதி மேல்சதி செய்து ஆளை வெளி விடமாட்டான்கள்.