பாஸ் பிரதமர் பதவியைக் கொடுக்க முன்வந்ததாம்: கூ லி அதை ஏற்றுக்கொண்டாராம்

ku liதேர்தலில்  வெற்றி பெற்றால்  பிரதமர்  பதவி  ஏற்க  வேண்டும் என்று  பாஸ்  கேட்டுக்கொண்டதை  அம்னோ குவா  மூசாங்  எம்பி  தெங்கு  ரசாலி  ஏற்றுக்கொண்டாராம். பாஸ் தலமைச்  செயலாளர்  முஸ்டபா  அலி  இத்தகவலை  வெளியிட்டிருக்கிறார்.

13வது பொதுத்  தேர்தலுக்கு  முன்பாக  நடந்த  கதை  இது.  ஆனால், பிகேஆர்  அதற்கு  மறுப்புத்  தெரிவித்தது. அது  அன்வார்  இப்ராகிம்தான்  பிரதமராக  வேண்டும்  என்பதில்  உறுதியாக  இருந்தது.  பாஸும்  பக்கத்தான்  உணர்வில்  பிகேஆரின்  முடிவுக்குப் பணிந்து  போனதாக  அவர்  சொன்னார்.

பிரதமராவதற்கு  அம்னோவைத் துறப்பதற்கும்  தெங்கு  ரசாலி  ஆயத்தமாக  இருந்தார்  என  முஸ்டபா  கோலா  திரெங்கானுவில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.