சிலாங்கூரில் பாஸ் அடிநிலை தலைவர்கள் பதவிவிலகும் படலம் தொடர்கிறது. நேற்றிரவு ஷா ஆலம் தொகுதித் தலைவர்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர்.
ஷா ஆலம் தொகுதித் தலைவர் அஸ்லி யூசுப், துணைத் தலைவர் சுல்கிப்ளி முகம்மட் நானி, உதவித் தலைவர் முகம்மட் ஜமில் அப்ட் ரஹிம் ஆகிய மூவரும் நேற்றைய தொகுதிக் கூட்டத்தில் தங்கள் பதவிவிலகலை அறிவித்தனர்.
அவர்களுடன் ஷா ஆலம் தொகுதி செயல்குழுவினர் 18 பேரும் பதவி விலகினர்.
“பதவி விலகல் மூலம் ஷா ஆலமில் பாஸ்ஸைப் பல்வீனப்படுத்துவது எங்களின் நோக்கமல்ல. எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் இன்னொரு தளத்துக்குச் சென்று இஸ்லாத்துக்காக போராட விரும்புகிறோம், அவ்வளவுதான்”, என்று அம்முவரும் ஓர் அறிக்கையில் கூறினர்.
பாஸ் கட்சிக்கு கோவிந்தா! கோவிந்தா!.
சரியான முடிவு… வாழ்த்துக்கள்
சந்தோசமான விஷயம் .
தாங்கள் கூறியுள்ள பதவி விலகலுக்கான காரனம் பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்!!! தொடரட்டும்!!!!
தவளை மாதிரி தாவிக்கொண்டே இருங்கள் விளங்கிடும் உங்கள் கட்சி !