பேங்க் நெகாரா மலேசியா எவ்வித தலையீடுமின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவாதம் அளித்துள்ளார்.
“நாட்டின் பணக் கொள்கையை நிர்வகிப்பது பேங்க் நெகாராவின் பொறுப்பு.
“அந்த வகையில் பேங்க் நெகாரா மலேசியா சுதந்திரமாக செயல்படுவதை அரசாங்கம் ஆதரிக்கிறது”, என நஜிப் கூறினார்.
பேங்க் நெகாரா விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுகிறது என்றும் அது முதலீட்டாளர்கள் நாட்டின்மீது வைத்துள்ள நம்பிக்கை குறைவதற்கு வழிகோலும் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
முதலீட்டாளர்கள் நாட்டின்மீது வைத்துள்ள நம்பிக்கை “குறைவதற்கு வழிகோலும்” என்பது இன்றைய கவலை அல்ல அது “நிஜமாகி விட்டதே” என்பதுதான் இன்றைய கவலை. அந்நிய நாட்டு முதலீடு கடந்த காலாண்டில் 41% குறைந்திருக்கிறது. புதிதாக வேலைச் சந்தைக்கு வரும் இளைய தலைமுறையின் நிலை என்னாவது? அம்போ!
பிறகு ஏன் FDI 41% சரிந்துவிட்டது??? அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம் நாட்டின் பொருளாதாரத்தின் மீது அத்துணை நம்பிக்கையோ?? என்ன நம்பிக்கை நாயகனே???
நம் நாட்டு நாணயம் ராக்கெட் வேகத்தில் சரிந்து கொண்டு வருகிறதே, இதுதான் பேங்க் நெகாராவின் லட்சணமா?
இதனால்தான், 1MDB விவகாரத்தில் தாம் வாயைத் திறந்தால் போலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்று பேங்க் நெகாரா கவர்னர் அன்று சொன்னாரோ??? இதுதான் சுதந்திரமாக செயல் படுவதோ???
சிங்கம் ஐயா ! போற போக்கை பார்த்தால் சொந்தமாக பயிர் செய்து சாப்பிட வேண்டும் போல் இருக்கே ! உங்கள் காய் கரி தோட்ட வித்தைகளை சற்று கற்று தருவீர்களா ?
உலகின் கின்னஸ் சாதனை படைத்த அருமையான யோசனை !!!!!!!!!!
பொருளாதாரம் மேம்படும் துறைகளிலும்,நாடுகளிலும் நம் நாட்டு பணம் முதலீடு செய்வதை உறுதி செய்ய திறமையான ஆய்வாளர்களை வேலைக்கு அமர்த்துங்கள் பிரதமரே! Just because we are handling limited private funds doesn’t mean we are incapable.It’s your call to equally recognize our talents for greater benefit of the nation….good luck!